திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற அனைத்துத் துறை அரசு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் இந்த ஆண்டு உடுமலை உள்பட மூன்று பகுதிகளில் புதிதாக கால்நடை மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன.
120 மாணவர்கள் படிக்கக்கூடிய அளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கல்லூரிகளில் சேருவதற்கான 15 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இன்னும் ஒருசில தினங்களில் முறையாக கவுன்சிலிங் தொடங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும்.
சேலம் தலைவாசலில் 1,200 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும் கால்நடை ஆராய்ச்சி மையப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது. தினமும் சுமார் மூன்றாயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
திருப்பூர் மாவட்டம் அழகுமலை விவசாயிகளால் தொடங்கப்பட உள்ள கால்நடை சந்தை குறித்து முறையான ஆய்வுசெய்து நிபந்தனைகளுக்குப் பிறகு அனுமதி வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 75 ஆண்டு கால அரச மரம் வேருடன் பிடுங்கப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றம்