திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் மற்றும் பெதப்பம்பட்டி பகுதியில் விலையில்லா நாட்டுக்கோழிகள் வழங்கும் விழா கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் சுமார் 400 பயனாளிகளுக்கு ரூ. 8 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா நாட்டுக் கோழிகளை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பிராய்லர் கோழிகளுக்கு நோய் தாக்குதல் இருப்பதாக பரவும் வதந்திகளில் உண்மையில்லை. இதுவரை அரசுக்கு எந்த புகாரும் வரவில்லை. பிராய்லர் கோழி விற்பனையில் எந்த பாதிப்பும் இதுவரை இல்லை. மக்களும் நன்கு பயன்படுத்திவருகிறார்கள்.
ஆனால் தமிழ்நாடு முதலமைச்சரின் உத்திரவின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண்டல இணை இயக்குநர், துணை இயக்குநர் ஆகியோர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு பிராய்லர் கோழி வளர்க்கும் பண்ணைகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்யவும், நோய் தாக்குதல் இருந்தால் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. தவறான தகவல்கள் பரவுவதை நம்பவேண்டாம்’ என்றார்.
இதையும் படிங்க: முழுக் கோழியை செரிக்க முடியாமல் துப்பிய மலைப்பாம்பு!