ETV Bharat / state

'பழனிசாமிக்கு அது இருக்கு; ஸ்டாலினுக்கு இல்லை' - எஸ்.பி. வேலுமணி - அமைச்சர் எஸ்.பி வேலுமணி

திருப்பூர்: முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமிதான் வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசியுள்ளார்.

Minister
Minister
author img

By

Published : Feb 10, 2021, 1:44 PM IST

திருப்பூர் மாவட்டத்திற்கு பிப்ரவரி 11, 12 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பரப்புரைக்காக வருகிறார். அதற்கான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் இருக்கும் தனியார் மண்டபத்தில் நடைபெற்றுது.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிர்வாகிகள் மத்தியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசும்போது, "2021இல் மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தேர்வாவது உறுதி. குறுக்கு வழியில் முதலமைச்சராக வர மு.க. ஸ்டாலின் முயற்சி செய்கிறார். வழக்கமாக ஸ்டாலின் பொய் மட்டுமே பேசுவார். எதுவும் செய்ய மாட்டார். ஆனால் முதலமைச்சர் செய்வார்.

அதன் வெளிப்பாடே விவசாயக் கடன் தள்ளுபடி. இதன்மூலம் அனைத்து தரப்பு மக்களும் தமிழ்நாடு முதலமைச்சரை ஏற்றுக்கொண்டுவிட்டனர். திமுக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என அனைவருக்கும் தெரியும். நாடாளுமன்றத் தேர்தலில் பொய்களை பேசி மட்டுமே வெற்றிபெற்றார்.

நம் எதிரி திமுக; நமக்குள் இருப்பது அண்ணன் தம்பி பிரச்சினை. நாம் ஒற்றுமையுடன் வேலை செய்ய வேண்டும். முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். அதற்கு நாம் பணியாற்ற வேண்டும்.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து 20 நாள்களுக்குள் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சித் தேர்தல் நடைபெறும். சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் வெற்றிபெற்றால்தான் அனைத்திலும் நாம் வெற்றிபெற முடியும். அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்.

அப்போதுதான் நாம் வெற்றிபெற முடியும். முதலமைச்சர் பதவிக்கு வருவதற்கு ஒரு அமைப்பு ராசி வேண்டும். அது எடப்பாடிக்கு உள்ளது. ஸ்டாலினுக்கு இல்லை. நம் கொள்கை வேறு, கூட்டணி வேறு. சிறுபான்மையினர் பாதுகாப்பு என்பது நம் கொள்கை. சிறுபான்மையினரும் முதலமைச்சருக்கு வாக்களிக்கத் தயாராக உள்ளனர்" என்று கூறினார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் வேட்பாளர் அறிவித்தபோதே அதிமுக வெற்றி உறுதி- எஸ்பி வேலுமணி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.