திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் அனைத்து ஊராட்சிகளுக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தூய்மைப் பணிக்காக மின்கல வாகனம், மகளிருக்கு மானியத்தில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழா உடுமலைபேட்டையில் நடைபெற்றது. இதை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், திருப்பூர் ஆட்சியர் விஜய கார்த்திகேயன் ஆகியோர் வழங்கினர்.
இதேபோல் பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட பயனாளிகளுக்கு அரசாணை வழங்கப்பட்டது. அதன்பின் பெரியகோட்டை ஊராட்சி மாரியம்மன் நகரில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தில் சுற்றுச்சுவர் கட்டடத்தை திறந்து வைத்து சமுதாய நலக்கூடத்தை பார்வையிட்டனர். இந்நிகழ்வில் துறை சார்ந்த அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.