திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக திருப்பூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அள்ளுவதற்கு பேட்டரியில் இயங்கக் கூடிய 20 சிறிய ரக வாகனங்களும், நான்கு மினிடோர் வாகனங்களும் வாங்கப்பட்டுள்ளது.
இதனை திருப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் நகராட்சி நிர்வாகத்திடம் வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், " பல்லடம் நகராட்சியில் சார்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது குப்பைகளை அள்ளுவதற்காக ரூ.65 லட்சம் செலவில் பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. மேலும் பல்லடம் அறிவொளி நகர் பகுதியில் சுமார் ஆயிரத்து700 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்காகவும், விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. கூடிய விரைவில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும்." என்றார்