ETV Bharat / state

மனைவி பிரிந்து சென்றதால், திருமணம் செய்து வைத்தவருக்கு கத்தி குத்து! - Man tries to kill his friend in thiruppur

திருப்பூர்: தன்னைவிட்டு பிரிந்து சென்ற மனைவியைச் சேர்த்து வைக்காததால் திருமணம் செய்து வைத்தவரை கத்தியால் குத்தியவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Man tries to kill his friend in thiruppur
author img

By

Published : Apr 21, 2019, 7:17 PM IST

திண்டுக்கல் மாவட்டம் சின்னாலப்பட்டியை சேர்ந்த ராஜன் என்பவர், திருப்பூர் பாரதி நகர்ப் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். அதேபகுதியில் வசிக்கும் திருமணி என்பவர் பெயின்டராக பணியாற்றி வருகிறார். இருவரும் சின்னாலப்பட்டியை சேர்ந்தவர்கள் என்பதால் தனக்குத் தெரிந்த பெண்ணை ராஜனுக்குத் திருமணம் செய்து வைக்க திருமணி ஏற்பாடு செய்தார். பின்னாளில் இருவருக்கும் திருமணத்தை நடத்திவைத்துள்ளார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ராஜன் தொடர்ந்து மது அருந்துவதால் ஆத்திரமடைந்த அவரது மனைவி மஞ்சுளா, ராஜனை விட்டுப் பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் மனமுடைந்த ராஜன் தனது மனைவியைச் சேர்த்து வைக்க வேண்டும் எனத் திருமணம் செய்து வைத்தவரிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

இதில் மஞ்சுளா வர மறுத்த நிலையில், தன்னால் மஞ்சுளாவை சமாதானப்படுத்த முடியாது என திருமணி தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ராஜன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திருமணியை சரமாரியாகக் குத்தியுள்ளார்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் திருமணியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, ராஜனைப் பிடித்து திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து ராஜன் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூரில் பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்காததால் திருமணம் செய்து வைத்தவருக்கு கத்தி குத்து.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாலப்பட்டியை சேர்ந்த ராஜன் என்பவர் திருப்பூர் பாரதிநகர் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதேபகுதியில் வசிக்கும் திருமணி என்பவர் பெயின்டராக பணியாற்றி வருகிறார். இருவரும் சின்னாலப்பட்டியை சேர்ந்தவர்கள் என்பதால் தனக்கு தெரிந்த பெண்ணை ராஜனுக்கு திருமணம் செய்து வைக்க திருமணி ஏற்பாடு செய்து திருமணம் நடத்திவைத்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ராஜன் தொடர்ந்து மது அருந்துவதால் ஆத்திரமடைந்த அவரது மனைவி மஞ்சுளா ராஜனை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் மனமுடைந்த ராஜன் தனது மனைவியை சேர்த்து வைக்க வேண்டும் என திருமணம் செய்து வைத்த திருமணி யிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். மஞ்சுளா வர மறுத்த நிலையில் தன்னால் முடியாது என திருமணி தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ராஜன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திருமணியை சரமாரியாக குத்தியுள்ளார். இதனை கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள் திருமணியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜனையும் பிடித்த பொதுமக்கள் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.