ETV Bharat / state

ரூ.600 கடன் தொகைக்காக நள்ளிரவில் பிடித்து வைத்த ஏஜெண்ட்.. திருப்பூர் பெண் கண்ணீர் மல்க கதறல்!

author img

By

Published : Aug 3, 2023, 1:17 PM IST

மகளிர் சுய உதவிக்குழு கடன் தொகை 600 ரூபாயை செலுத்தக்கூறி நள்ளிரவு 12 மணிக்கு பெண்களை நடுரோட்டில் பிடித்து வைத்த வசூல் செய்த ஏஜெண்டால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tiruppur
திருப்பூர்
ரூ.600 கடன் தொகைக்காக நள்ளிரவில் பிடித்து வைத்த ஏஜெண்ட்டால் பரபரப்பு

திருப்பூர்: குளத்துப்புதூர் பகுதியைச் சேர்ந்த 10 பெண்கள் இணைந்து குழுவாக பி.எஸ்‌.எஸ் மகேந்திரா பைனான்ஸில் தலா 40 ஆயிரம் ரூபாய்க் கடன் பெற்றுள்ளனர். அதற்கு வாரம் 1000 ரூபாய் வீதம் 52 வாரம் செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. இதுவரை 28 வாரம் பணம் முறையாகச் செலுத்திய நிலையில், தற்போது 29 ஆவது வாரம் 9 பேர் மட்டும் பணம் செலுத்தி உள்ளனர்.

மீதம் உள்ள ஒருவர் உடல்நலம் குன்றியதால் 400 ரூபாய் மட்டும் கொடுத்துள்ளதாகவும், மீதம் தர வேண்டிய 600 ரூபாய் பணத்தைக் காலையில் தருவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் மீதமுள்ள ரூ.600 பணத்தை உடனே கொடுக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த சிவானந்தம் என்ற பணம் வசூல் செய்யும் நபர் இரவு 12 மணிக்குக் குழுவில் உள்ள 10 பெண்களையும் பணத்தைக் கொடுத்து விட்டு வீட்டுக்குச் செல்லுங்கள் எனக் கூறி நடுரோட்டில் பிடித்து நிற்க வைத்துள்ளார்.

இதனிடையே 11 மணிக்கு மேல் வீட்டின் கதவைத் தட்டி பெண்களை வெளியே அழைத்து வந்ததால் தனது கணவர் வீட்டிற்கு வர வேண்டாம் என்று கதவை மூடிவிட்டார் எனப் பெண்கள் கண்ணீர் சிந்திய படி சாலையில் நின்றிருந்தனர். தகவலறிந்து வந்த பெண்களின் உறவினர்கள் கூடி வசூல் செய்ய வந்த நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பொதுமக்கள் அதிக அளவில் கூடியதால் வசூல் செய்ய வந்த நபர் நைசாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், "மகேந்திரா பைனாஸில் கடன் எடுத்துள்ளோம். அனைவரும் பணம் செலுத்திய நிலையில், ஒரு வயதானவர் மட்டும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஒரு மாலை 4 மணிக்குள் பணம் செலுத்துவதாகக் கூறினார். அதனால் அந்த முகவரிடம் மாலை 7 மணிக்குள் பணம் செலுத்துவதாகத் தெரிவித்தேன்.

ஆனால் அந்த அம்மா பணம் தரவில்லை என்ற காரணத்தால், என்னை அழைத்துக் கேட்டார். ஆனால் பணம் செலுத்த வேண்டிய நபர் இவர் தான், என்னிடம் கேட்காதீர்கள் என்று தெரிவித்தேன். ஆனால் பல மணி நேரமாகியும் பணம் வராததால் இரவு தன்னிடம் வந்து, பணம் இன்னும் வரவில்லை. நீங்கள் தான் கையெழுத்திட்டுள்ளீர்கள், ஆகையால் நீங்கள் தான் பணம் தர வேண்டும். இல்லையெனில் உங்களை விடமாட்டேன் எனக் கூறினார். இது போன்று நடந்ததால், கோபமடைந்த எனது கணவர் வீட்டை விட்டு வெளியே அனுப்பி கதவை பூட்டிக்கொண்டார்" என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இந்நிலையில், இரவு 12 மணிக்கு ரூ.600 பணத்தை வசூல் செய்ய 10 பெண்களை சாலையில் பிடித்து வைத்த நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: கேரளாவில் அமெரிக்க பெண் கூட்டுப் பாலியல் சீண்டல் வழக்கில் இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.