திருவள்ளூர் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட தெருக்கூத்து கலைஞர்கள் உள்ளனர். திருவிழாக் காலங்கள், சுப நிகழ்ச்சிகள், துக்க நிகழ்ச்சிகளுக்கும் இவர்கள் நிகழ்ச்சிகளை நடத்தி, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர் .
தற்போது கரோனா தொற்று காரணத்தால் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்ற அரசின் உத்தரவால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட இடங்களுக்கும் சென்று கூத்து நிகழச்சி நடத்த முடியாமல் உள்ளனர். வீட்டிலேயே அடைந்து கிடப்பதால் குடும்பத்தை நடத்துவதில் சிரமம் இருப்பதாகவும் எனவே அரசு தங்களைப் போன்ற தெருக்கூத்துக் கலைஞர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணத்தை தருவது மட்டுமல்லாது கூடுதலாக 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
ஆகவே அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி எமதர்மன், நாரதர் உள்ளிட்ட பல்வேறு வேடமிட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதையும் படிங்க: நீலகிரியில் தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில் 300 குழந்தைகளின் குடும்பங்களுக்கு உதவி