திருப்பூர் அம்மன் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் உடற்பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக இருப்பவர் வெஸ்லி டேனியல்.
இந்நிலையில் நேற்று காலை இந்து முன்னணியைச் சேர்ந்த சந்தோஷ், கார்த்தி, தமிழ், குட்டி விஷ்வா, ஆறுசாமி ஆகிய ஐந்து பேரும் உடற்பயிற்சி மையத்திற்கு சென்று அங்கு தாங்கள் சேர்வது குறித்து கேட்டுள்ளனர்.
இதனையடுத்து பயிற்சி மையத்தில் சேரவேண்டுமென்றால், பணம் தர வேண்டும் என பயிற்சியாளர் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஐந்து பேரும், பயிற்சியாளரை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த வெஸ்லி டேனியல் திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே காவல் துறையினர் உடற்பயிற்ச்சி மையத்திற்குள் சென்று தாக்கிய அப்பகுதி இந்து முன்னணியை சேர்ந்த சந்தோஷ், ஆறுசாமி ஆகிய இருவரை கைது செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க...ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விசாரணை - ராகுல் காந்தியை விசாரிக்கக்கோரி முகிலன் முழக்கம்