இந்து முன்னணியின் நிறுவனத் தலைவர் ராம கோபாலன் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா சோதனையில் தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், "ராம கோபாலனின் மறைவு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் ஒற்றுமைக்காகவும், பாதுகாப்புக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர்.
அவரின் கொள்கைகளை இந்து முன்னணி அமைப்பு தொடர்ந்து கடைப்பிடித்து அவர் வழியில் நடக்கும். மேலும், அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை (அக். 1) தமிழ்நாடு முழுவதும் இந்து முன்னணி சார்பில் இந்து முன்னணி கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு அமைதியான முறையில் அஞ்சலி செலுத்தப்படும்" என்றார்.
இதையும் படிங்க: இந்து முன்னணி ராம கோபாலன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்