ETV Bharat / state

‘கோயில்களை திறக்காவிட்டால் தேர்தலில் அதிமுக தோல்வியடையும்’

author img

By

Published : Jun 11, 2020, 12:18 AM IST

ஈரோடு/திருப்பூர்: தமிழ்நாட்டில் கோயில்களை திறக்காவிட்டால் ஆளும் அதிமுக அரசு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியுறும் என இந்து முன்னணி மாநில தலைவர் பாலசுப்பிரமணியம் எச்சரித்துள்ளார்.

Hindu munnani organization protest for resume worship places

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஐந்தாம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்திருந்தது. அதில் கடந்த எட்டாம் தேதி முதல் மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி மத வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதிஅளித்து.
இதையடுத்து நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கோயில்கள் திறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றுவருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மத வழிபாட்டுத் தலங்கள் திறப்பதற்கு அரசு அனுமதி மறுத்துள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநிலம் முழுவதும் இந்து முன்னணி அமைப்பினர் கோயில்களின் முன்பு ஒற்றைக்காலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தவகையில், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை உடனடியாக திறக்கக்கோரியும், அரசைக் கண்டித்தும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் திருப்பூர் பெருமாள் கோவில் முன்பு இந்து முன்னணியினர் ஒற்றைக்காலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநில தலைவர் பாலசுப்பிரமணியம், மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் இடம் கோயில் மட்டுமே. கோயில்களை திறக்காவிடில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் அதிமுக படுதோல்வி அடையும் என எச்சரித்தார்.

ஈரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி அமைப்பினர் அந்தந்த பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு முன் ஒற்றைக்காலில் நின்று ஆர்பாட்டம் நடத்தினர். குழந்தைகள் சிலர் அம்மன் வேடமணிந்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மீனாட்சிசுந்தரனார் சாலைப் பகுதியில் அமைந்துள்ள பெரிய மாரியம்மன் கோயில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது, மதுப்பிரியர்களுக்காக டாஸ்மாக்கை திறந்த அரசு, பக்தர்களுக்காக மூடப்பட்டுள்ள கோயில்களை திறந்திட வேண்டும்.
மதுபானக் கூடங்களால் ஏற்படாத நோய்த்தொற்று கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் காரணமாக பரவிவிடுமா? வழிபாடு, பிரார்த்தனைகளால் நோய்ப்பாதிப்பை குறைக்க வாய்ப்பிருப்புள்ளதால் கோயில்களை திறந்து வழிபாடு மேற்கொள்ள அரசு அனுமதி வழங்கிடவேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.
அரசின் கட்டுப்பாடுகளை ஏற்று, விதிமுறைகளுக்குட்பட்டு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் கோயில்களில் 100 விழுக்காடு பின்பற்றப்படும் எனவும் உறுதியளித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.