திருப்பூர் மாவட்ட இந்து மக்கள் கட்சி செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ’தமிழ்நாட்டில் ஆன்மீக அரசியல் கொள்கைகள் நல்ல வரவேற்பு பெற்றுவருகிறது.
ரஜினிகாந்த் துக்ளக் விழாவில் பேசும்போது ராமர் அவமதிக்கப்பட்ட சம்பவத்தை பேசினார். இதற்கு மறுப்பு தெரிவித்த திராவிடர் கழகத்தினர் ரஜினையை மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு ரஜினி ஆதாரங்களை காட்டி மன்னிப்பு கேட்க முடியாது என மறுத்துவிட்டார்.
ரஜினிகாந்துக்கு ஆதரவு பெருகுவதால், அவருக்கு எதிராக ஒரு சில தீவிர இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தியும் வழக்கு போடுவதாகவும் மிரட்டுகின்றனர். இதற்கு அவர் அஞ்சப்போவதில்லை. ரஜினிக்கு தமிழ்நாடு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும். ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் மூலம் திராவிட இருள் நீங்கும். ரஜினிகாந்துக்கு முழுமையான ஆதரவை தெரிவிக்கிறேன்.
தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு திமுக ஆட்சிக்காலத்தில் நடந்தபோது, சிவாகம முறைப்படிதான் நடைபெற்றது. குடமுழுக்கு நடத்த மொழி ஒரு முக்கியமல்ல. இதில் குழப்பம் ஏற்படுத்தவே தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என சிலர் தெரிவிக்கிறார்கள். இந்த குழப்பங்களுக்கு தமிழ்நாடு அரசு பணிந்து போகக்கூடாது’ என்றார்.
இதையும் படிங்க: பெரியார் எதிர்ப்பு அரசியலில் ரஜினிகாந்த் ஈடுபடுகிறாரா? - பதில் அளிக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்...