திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த கட்டெரி அம்மன் கோயில் பகுதியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மீட்கப்பட்ட கொத்தடிமை குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்ட வணிகவரி, பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் மீட்கப்பட்ட கொத்தடிமை குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, அவர்களுக்கு ரூ.2.40 லட்சம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இம்முகாமில் அரசு அலுவலர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட மீட்கப்பட்ட கொத்தடிமை மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலர்!