ETV Bharat / state

இயற்கையை தூய்மைப்படுத்தும் விழிப்புணர்வு போட்டி! - இயற்கையை காக்கும் திருப்பூர் மக்கள்

திருப்பூர்: இயற்கையை காக்கும் வகையில் தூய்மை மற்றும் பசுமை விழிப்புணர்வு ‘நம்ம திருப்பூர் பிளாக் ரன்’ போட்டியை ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

thiruppur
author img

By

Published : Nov 17, 2019, 8:33 PM IST

திருப்பூர் மாவட்டம் காந்திநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தனியார் அமைப்பு சார்பில் இயற்கையை காக்கும் வகையில், தூய்மை, பசுமை விழிப்புணர்வு "நம்ம திருப்பூர் பிளாக் ரன்" போட்டியை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நம்ம திருப்பூர் பிளாக் ரன் போட்டி

இந்தப் போட்டியானது ஏழு வெவ்வேறு வழிகளில் ஐந்து கிலோ மீட்டர், மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. போட்டியாளர்கள் அனைவரும் சாலையோரத்தில் கிடக்கும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்துக் கொண்டு போட்டிகளை நிறைவு செய்தனர்.

இதில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. மேலும், இந்தப்போட்டியின் மூலம் திரட்டப்படும் நிதியின் ஒரு பகுதி புற்றுநோயாளிகள் சிகிச்சைக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Intro:இயற்கையை காக்கும் வகையில்
தூய்மை மற்றும் பசுமை விழிப்புணர்வு -நம்ம திருப்பூர் பிளாக் ரன் என்கிற போட்டியை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் துவக்கி வைத்தார்.
3000 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்பு.Body:திருப்பூர் காந்திநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தனியார் அமைப்பு சார்பில்
இயற்கையை காக்கும் வகையில்
தூய்மை மற்றும் பசுமை விழிப்புணர்வு -நம்ம திருப்பூர் பிளாக் ரன் என்கிற போட்டியை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்த போட்டியானது 7 வெவ்வேறு வழிகளில் 5 கி.மீ, 3 கி.மீ. தூரத்தில் இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது .இதில் பங்கேற்பவர்கள் ரோட்டோரம் உள்ள குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து கொண்டு போட்டிகளை நிறைவு செய்தனர். இதில்
3000 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.போட்டிகளை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.
இதில் திரட்டப்படும் நிதியின் ஒரு பகுதி புற்றுநோயாளிகள் சிகிச்சைக்கு வழங்கப்படுகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.