திருப்பூரில் கலப்பட நெய் தயாரித்து பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்வதாக, உணவு பாதுகாப்புத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையிலான அலுவலர்கள், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆர்வி லே-அவுட் பகுதியில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள வீடுகளில் பல ஆண்டுகளாக எண்ணெய் இல்லாமல் டால்டா, பாமாயில் கலந்து போலியாகத் நெய் தயாரித்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அப்பகுதியில் கலப்பட எண்ணெய் தயாரித்து விற்பனை செய்து வந்த ஏழு வீடுகளுக்கு அலுவலர்கள் அதிரடியாக சீல் வைத்தனர். மேலும் அங்கிருந்த 500 லிட்டர் கலப்பட நெய்யை பறிமுதல் செய்தனர்.
அங்கிருந்து கலப்பட நெய் தயாரித்து கிராமங்களுக்கு வாகனங்களில் சென்று விற்பனை செய்து வந்ததாகவும், மேலும் கடைகள், பேக்கரிகள் ஆகியவற்றிர்க்கு விற்பனை செய்துள்ளார்கள் என்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர்.