ETV Bharat / state

வெள்ளப்பெருக்கால் தவிக்கும் தளிஞ்சி மலைவாழ் மக்கள்! - வெள்ளப்பெருக்கு

திருப்பூா்: உடுமலை அருகே கூட்டாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றை கடந்து செல்ல முடியாமல் தளிஞ்சி மலைவாழ் மக்கள் தவித்து வருகின்றனர்.

தளிஞ்சி வெள்ளப்பெருக்கு
author img

By

Published : Jul 22, 2019, 12:55 PM IST

திருப்பூா் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட தளிஞ்சி, மஞ்சம்பட்டி தளிஞ்சிவயல், கீழானவயல் உள்ளிட்ட மலை கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனா். இவர்கள் நெடுநாட்களாக பயன்படுத்தி வந்த சம்பகாடு பாதையை கேரளா வனத்துறை கம்பிவேலியால் மறித்ததையடுத்து ரேசன் பொருட்கள், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு கூட்டாறு வழியாக உடுமலை பகுதிக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரள மாநிலம் மூணாறு பகுதியில் மழை பெய்து வருவதால், கூட்டாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தளிஞ்சியை சேர்ந்த மக்கள் நகர பகுதிக்கு வந்து தேவையான பொருட்கள் வாங்க ஆற்றைக் கடக்க சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், முருகன் என்பவா் இருசக்கர வாகனத்துடன் ஆற்றை கடக்கும் போது குடும்பத்துடன் தண்ணீரில் சிக்கிக் கொண்டு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டாா். அதேபோல், கைக்குழந்தைகளுடன் ஆபத்தான நிலையில் ஆற்றைக் கடந்து வருகின்றனர்.

தளிஞ்சி வெள்ளப்பெருக்கு
கூட்டாறு பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டி தருவதாக கடந்த ஆண்டே மாவட்ட நிா்வாகம் உறுதி அளித்திருந்தது. ஆனால் ஓராண்டு காலமாகியும் இதுவரை எந்த பணிகளையும் மேற்கொள்ளாமல் வனத்துறை அதிகாரிகளும் மாவட்ட நிா்வாகமும் உள்ளதால், ஒவ்வொரு நாளும் உயிரை பணயம் வைத்தே ஆற்றைக் கடப்பதாகவும், ஆற்றை கடந்து வரமுடியாத நிலையில் ஊருக்குள் அடைபட்டுக்கிடக்க வேண்டிய நிலையில் உள்ளதாகவும் மலைவாழ் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Intro:Body:உடுமலை அருகே கூட்டாறில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றை கடந்து செல்ல முடியாமல் தளிஞ்சி மலைவாழ் மக்கள் தவிப்பு

கைக்குழந்தைகளுடன் ஆபத்தான நிலையில்
ஆற்றைக்கடக்கும் அவலம்

திருப்பூா் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி வனச்சரகத்திற்குட்பட தளிஞ்சி மஞ்சம்பட்டி தளிஞ்சிவயல் கீழானவயல் உள்ளிட்ட மலைகிராமங்களில் 1000க்கும் மேற்பட்ட மலைவாழ்மக்கள் வசித்து வருகின்றனா்

இவா்கள் பலநூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சம்பகாடு பாதையை கேரளா வனத்துறை கம்பிவேலி போட்டு பாதையை மறித்ததால் ரேசன்பொருட்கள் மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு இவா்கள் கூட்டாறு வழியாக உடுமலை பகுதிக்கு வரவேண்டியுள்ளது

மழைகாலங்களில் வெள்ளபெருக்கு ஏற்பட்டால் ஆற்றை கடந்து வரமுடியாத நிலையில் இவர்கள் ஊருக்குள் அடைபட்டுகிடக்கவேண்டிய நிலைதான்

தற்போது தென்மேற்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில் கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் மழை பெய்து வருவதால் கூட்டாறில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் தளிஞ்சியை சாா்ந்தவா்கள் நகர பகுதிக்கு வந்து மளிகை பொருட்கள் வாங்கி விட்டு மலைபகுதிக்கு திருப்பும் போது ஆற்றை கடக்க முடியாமல் தவித்தனா் முருகன் என்பவா் இருசக்கர வாகனத்துடன் ஆற்றை கடக்கும் போது குடும்பத்துடன் தண்ணீரில் சிக்கி கொண்டனா் பின்னா் பத்திரமாக மீட்கபட்டாா் கைக்குழந்தைகளுடன் ஆபத்தான நிலையில் ஆற்றைகடந்து வருகின்றனர் மலைவாழ் மக்கள்

கூட்டாறு பகுதியில் உயா்மட்ட பாலம் கட்டி தருவதாக கடந்த ஆண்டே மாவட்ட நிா்வாகம் உறுதி அளித்தது ஆனால் ஒராண்டாகியும் இதுவரை எந்த பணிகளையும் மேற்கொள்ளாமல் வனத்துறை அதிகாரிகளும் மாவட்ட நிா்வாகமும் அசட்டையாக இருப்பதால் ஒவ்வொரு நாளும் உயிரைகையில் பிடித்துகொண்டு ஆற்றைகடக்கின்றனர் மழைவாழ் மக்கள்..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.