ETV Bharat / state

முதன்முறையாக வாக்களிப்பவர்களின் எதிர்ப்பார்ப்பு என்னென்ன?

author img

By

Published : Mar 10, 2021, 1:56 PM IST

திருப்பூர்: தங்கள் முதல் வாக்கை செலுத்தவிருக்கும் இளம் வாக்காளர்கள் நல்லாட்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

First-time voters voxpop
முதல் முறையாக வாக்களிப்பவர்களின் எதிர்ப்பார்ப்பு

சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் முதல்முறை வாக்களிக்க உள்ள இளம்வாக்காளர்களின் எதிர்ப்பார்ப்பு என்னென்ன என்பது தொடர்பாக திருப்பூர் மாவட்டத்தில் கள ஆய்வு நடத்தினோம்.

எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள திருப்பூரில் ஆண் வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 23 லட்சத்து 52 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் சுமார் 70 ஆயிரம் பேர் வாக்களிக்க உள்ளனர்.

சில இளம் வாக்காளர்களை சந்தித்துப் பேசியதில் சமூக பிரச்னைகளுக்கு சுமூகத்தீர்வு காணும் கட்சியை மட்டுமே தேர்ந்தெடுக்கவுள்ளதாகத் தெரிவித்தனர். தனியார் நிறுவன ஊழியர் கிருத்திகாவிடம் இதுகுறித்து கேட்டபோது, "பெண்கள் பாதுகாப்பே பிரதானம். எந்தக் கட்சி பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்கிறதோ அக்கட்சியே என் தேர்வு. முதல் வாக்கை வீணாக்க விடமாட்டேன்" என நம்பிக்கைத் தெரிவித்தார்.

முதல் வாக்கை வீணாக்கக் கூடாது என இளைய தலைமுறையினர் தெளிவாக இருக்கின்றனர். சமூக வலைதளங்கள் இந்தத் தலைமுறையினரை அப்டேட்டடாகவே வைத்துள்ளன. சந்தோஷ் என்ற இளைஞர் பேசுகையில், "கல்விக் கடனை தள்ளுபடி செய்யும் வாக்குறுதியை அளிக்கும் கட்சிதான் என் தேர்வு" என நறுக்கென முடித்தார்.

திருப்பூர் மாவட்டத்தைப் பொருத்தவரை ஸ்மார்ட் சிட்டி பணிகளால் போக்குவரத்து நெரிசலும், புழுதிப் படலங்களும் நகரத்தையே முற்றிலுமாகப் பாதித்துள்ளது. இதற்கு முறையான தீர்வு காணும் அரசுக்கு தங்களின் வாக்குகளை செலுத்த உள்ளதாக சில இளம் வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்

முதன்முறையாக வாக்களிப்பவர்களின் எதிர்ப்பார்ப்பு

இளம் வாக்காளர்களின் வாக்குகளைக் கவரும் வகையில், தேவையறிந்து அரசியல் கட்சிகள் அறிவிப்புகளை வெளியிடும் பட்சத்தில் அதிக வாக்குகளைப் பெற முடியும்.

இதையும் படிங்க:கட்டாயமாக வாக்களிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.