கோவை, மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜஹான்(38). இவர் காங்கேயம் அருகே உள்ள படியூரில் கழிவு துணிகளை அரைத்து நூல் தயாரிக்கும் ஆலையை நடத்தி வருகிறார்.
இந்த ஆலையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஆலையில் ஐந்து இயந்திரங்கள் நிறுவப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையடுத்து இன்று அதிகாலையில் (மார்ச் 7) ஆலையில் பஞ்சு சேமித்து வைத்திருந்த இடத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைக் கவனித்த தொழிலாளர்கள், உடனே காங்கேயம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இருப்பினும், பஞ்சு மற்றும் இயந்திரம் இருந்த கட்டடம் தீயில் கருகியது. இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டிருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.
விபத்து குறித்து காங்கேயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருப்பூரில் 60 கிலோ எடையுள்ள 2 வெண்கலச் சிலைகள் பறிமுதல்