திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மாதப்பூரில் குடிநீர் விநியோகம் செய்யும் நிறுவனத்தில், வட மாநிலத்தைச் சேர்ந்த 27 இளைஞர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் நான்கு பேர் கடந்த 3 நாள்களுக்கு முன்பு ஈரோட்டிலிருந்து வந்துள்ளனர்.
அதில் ஒருவருக்கு அங்கிருந்து வந்த நாள் முதல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் கரோனா பாதிப்பு உள்ளதால், அங்கிருந்து வந்த இந்த இளைஞருக்கும் கரோனா பாதிப்பு இருக்குமோ என கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதனால் அந்த இளைஞரை உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், அவருடன் தங்கியிருந்த அனைவரையும் உடனடியாக கிராமத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கிராம மக்கள் பல்லடம் காவல் துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க... கரோனாவை பரப்புங்கள் என சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் கைது