திருப்பூர் உழவர் சந்தையில் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த காய்கறிகளை விற்பனை செய்துவருகின்றனர். இந்நிலையில் தற்போது வியாபாரிகள் விவசாயிகள் விற்பனை செய்யும் அதேநேரத்தில் வெளிமாவட்டங்களில் இருந்து வாங்கி வரும் காய்கறிகளை விற்பனை செய்கின்றனர்.
இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விவசாயிகள் மட்டும் வியாபாரம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்து தரவேண்டும் என உழவர் உழைப்பாளர் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதனை படிங்க: சென்னையில் 18 ரேசன் அரிசி மூட்டைகள் கடத்த முயற்சி - ஒருவர் கைது