ETV Bharat / state

சார்... ப்ளீஸ் என்ன விடுங்க என கெஞ்சும் தாய்: கதறி அழும் கைக்குழந்தை - போலீசார் விசாரணை

திருப்பூர்: பல்லடம் அருகே உயர்மின் கோபுரம் அமைக்க நில அளவீடு பணியில் ஈடுபட்ட பவர்கிரீட் நிறுவனத்தினர் மற்றும் வருவாய் துறையினரை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

police attaracity
author img

By

Published : Aug 22, 2019, 10:20 PM IST

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும், தமிழ்நாடு அரசின் மின் தொடரமைப்புக் கழகமும் இணைந்து தமிழ்நாட்டின் மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், சேலம், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 12 உயர்மின் கோபுரங்கள் திட்டங்களை விவசாயிகளின் விளைநிலங்கள் வழியாக செயல்படுத்த உள்ளன.

காவல்துறையினரிடம் கெஞ்சும் தாய்

இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் உயர்மின் கோபுரங்களுக்கு பதிலாக சாலையோரமாக கேபிள் அமைத்து மின்சாரத்தை கொண்டு செல்லுமாறு வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு ஏற்க மனமில்லாமல் தவிர்த்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் நில அளவீட்டு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக கோவை, ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் திட்ட பணிகளை நடந்து வருகின்றனர்.

இதனை எதிர்த்து கேள்வி கேட்கும் விவசாயிகளை காவல்துறை மற்றும் வருவாய்துறையும் இணைந்து மிரட்டி, அச்சுறுத்தி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் மாவட்டத்தில் பவர்கிரீட் நிறுவனத்தினர் மற்றும் அரசு அலுவலர்கள் நில அளவீட்டு பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விவசாயிகள் அளவீடு மேற்கொள்ள கூடாது என, அலுவலர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், காவல்துறையினர் விவசாயிகள் மற்றும் பெண்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர். இதனிடையே கைக் குழந்தையை வைத்திருந்த பெண்ணை காவலர்கள் வலுக்கட்டாயமாக தூக்க முயன்ற காட்சி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

Intro:பல்லடம் அருகே உயர்மின் கோபுரம் அமைக்க நில அளவீடு பணியில் ஈடுபட்ட பவர்கிரீட் நிறுவனத்தினர் மற்றும் வருவாய் துறையினரை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் போலிசாருக்கும் விவசாயிகளுக்குமிடையே கடுமையான தள்ளுமுள்ளு. விவசாயிகளை கைது செய்து அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

Body:மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும், தமிழக அரசின் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் தமிழகத்தின் மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்களில் 12 உயர்மின் கோபுரங்கள் திட்டங்களை விவசாயிகளின் விளைநிலங்கள் வழியாக செயல்படுத்த உள்ளன.இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உயர்மின் கோபுரங்களுக்கு பதிலாக சாலையோரமாக கேபிள் அமைத்து மின்சாரத்தை கொண்டு செல்லுமாறு வலியுறுத்தி கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கடந்த டிசம்பர் மாதம் 13 மாவட்டங்களில் எட்டு இடங்களில் நடந்த தொடர் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தின் முடிவில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் கூட்டியக்கத்தை பேச்சுவார்தைக்கு அழைத்த தமிழக அரசு பேச்சுவார்த்தையின் முடிவில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க மனமில்லாத நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களை சந்தித்து ஆதரவு கேட்டும், கோரிக்கைகள் வைத்து வருகிறார்கள்.நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் நில அளவீட்டு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது இரண்டு வாரங்களாக கோவை, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடும் ஆட்சேபனையை மீறி காவல்துறை, வருவாய்துறை இணைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளை மிரட்டி, அச்சுறுத்தி திட்ட பணிகளை நிறைவேற்றி வருகிறார்கள்.அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சாலையூர்,காளியப்பன் கவுண்டன் புதூர் உள்ளிட்ட கிராமங்களில் பவர்கிரீட் நிறுவனத்தினர் மற்றும் அரசு அதிகாரிகள் நில அளவீட்டு பணியில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து அங்கு வந்த விவசாயிகள் அளவீடு மேற்கொள்ள கூடாது என அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.அதனை தொடர்ந்து சம்பவ இடம் வந்த காமநாயக்கன் பாளையம் காவல் துறையினர் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.ஆனால் தங்களது விவசாய நிலங்களில் அளவீடு பணிகள் மேற்கொள்ள கூடாது என விவசாயிகள் உறுதியாக தெரிவித்தனர். அதனை தொடர்ந்து விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது விவசாயிகள் மற்றும் பெண்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று அவர்களை கைது செய்தனர். இதில் கைக் குழந்தையை வைத்திருந்த பெண்ணை காவலர்கள் வலுக்கட்டாயமாக தூக்க முயன்றனர். இதில் பயந்து போன குழந்தை கதறி அழுதது பார்த்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. விவசாயிகளை கைதூ செய்த பின் அளவிடூம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.