திருப்பூர்: இலவச மின்சார திருத்த சட்டத்தை எதிர்த்தும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பெருமாநல்லூர் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் அறிவித்திருந்தனர். இந்தப் போராட்டத்தின்போது சென்னை ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஏ.கே.சண்முகம் அதிகாலை கைது செய்யப்பட்டார். தகவலறிந்து பெருமாநல்லூரில் கூடிய விவசாயிகள், கைது செய்தவரை விடுதலை செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்காரணமாக, ஏ.கே.சண்முகம் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் அவர், பெருமாநல்லூர் வந்து சென்னை நோக்கி செல்ல முயன்றதால், 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல் துறையினர் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதையும் படிங்க: மத்திய அரசை மிரட்டும் அன்னா ஹசாரே