ETV Bharat / state

போலி பட்டா தயாரித்து மோசடி - எம்.எல்.ஏ., சகோதரர்கள் பெண்ணிற்கு கொலை மிரட்டல்

திருப்பூர்: எம்.எல்.ஏ., விஜயகுமாரின் சகோதரர்கள் போலி பட்டா தயாரித்து இடத்தை விற்பனை செய்ய முயற்சித்ததோடு, அந்த இடத்தின் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததால் பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

போலி பட்டா தயாரித்து மோசடி
போலி பட்டா தயாரித்து மோசடி
author img

By

Published : Mar 11, 2020, 11:37 PM IST

திருப்பூர், பூலுவபட்டி, அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சகுந்தலா. இவருக்கு திருப்பூர் அண்ணாநகர் பகுதியில் சொந்தமாக பூர்வீக இடம் ஆறு ஏக்கர் 50 சென்ட் உள்ளது. அந்த இடத்தை திருப்பூர் வடக்குத் தொகுதி எம்எல்ஏ விஜயகுமாரின் சகோதரர்கள் மாரப்பன், கோபாலன் உள்ளிட்ட மூவர் சேர்ந்து போலி பட்டா தயாரித்து விற்க முயற்சி செய்துள்ளனர்.

இதுகுறித்து சகுந்தலா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தற்போது அந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு மாரப்பன், கோபாலன், அர்ஜுனன் ஆகியோர் சகுந்தலாவிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

போலி பட்டா தயாரித்து மோசடி

இதையடுத்து சகுந்தலா கொலை மிரட்டல் விடுத்த மூன்று பேரையும் கைது செய்யக் கோரி மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

இதையும் படிங்க: 'குண்டுவீசி கொல்வோம்' - முதலமைச்சர் பழனிசாமிக்கு கொலை மிரட்டல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.