ETV Bharat / state

பேரனால் தீக்குளிக்க முயன்ற தாத்தா, பாட்டி - திருப்பூரில் சோகம்!

திருப்பூர்: சொத்தை ஏமாற்றி எழுதிக் கொண்ட பேரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வயது முதிர்ந்த அவரது தாத்தா, பாட்டி இருவரும் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

tirupur
author img

By

Published : Nov 25, 2019, 1:43 PM IST

திருப்பூர் மாவட்டம் பெரிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து (81). இவரது மனைவி சரஸ்வதி (78). இவர்களுக்கு மொத்தம் 4 மகன்கள்.

இந்நிலையில் 2010ஆம் ஆண்டு பெரிச்சிபாளையம் பகுதியில் உள்ள இரண்டே முக்கால் சென்ட் நிலத்தை தனக்கு உயில் எழுதி வைக்கும்படியும், அதற்கு ஈடாக வயதான தங்களை நன்கு பார்த்து கொள்வதாகவும் கூறி, அவர்களது பேரன் செல்வராஜ் என்பவர், வயதான நாச்சிமுத்து தம்பதியினரிடம் கூறியுள்ளார்.

அவர் சொன்னதை நம்பி முதியவர்கள் இருவரும் உயில் எழுதிக் கொடுக்க சம்மதித்தனர். ஆனால், சொத்தை பேரன் செல்வராஜின் பேரில் மாற்றி எழுதிக்கொடுத்த பின்னர், தங்களைக் கவனிக்காமல் கைவிட்டார் என வயது முதிர்ந்த தம்பதியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதனால், விரக்தி அடைந்த வயதான தம்பதியினர் இருவரும் இன்று காலை திருப்பூர் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பாக மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

தீக்குளிக்க முயன்ற தம்பதியினர்

அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை மீட்டு தெற்கு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: காவலருக்கு தீ வைத்த தோழி! - காரணம் என்ன?

Intro:திருப்பூரில், சொத்தை ஏமாற்றி எழுதிக் கொண்ட பேரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வயது முதிர்ந்த கணவன், மனைவி இருவரும் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தனர்.Body:திருப்பூர், பெரிச்சிபாளையம் பி கே ஆர் லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து (81). இவரது மனைவி சரஸ்வதி (78). இவர்களுக்கு 4 மகன்கள். இதில் இரண்டாவது மகன் மணியின் மகன் செல்வராஜ் கடந்த 2010ஆம் ஆண்டு எனது பெயரில் பெரிச்சிபாளையம் பகுதியில் உள்ள 2 3/4 சென்ட் சொத்தை உயில் எழுதி வைக்கும்படி, உங்களை நன்கு பார்த்து கொள்வேன் என்றும் கூறினார் .அவர் சொன்னதின் பேரில் முதியவர்கள் உயில் எழுதிக்கொடுக்க சம்மதித்தனர். ஆனால் சொத்தை செல்வராஜ் பேரில் மாற்றி எழுதிக் கொடுத்த பின்னர், முதியவர்களை கவனிக்காமல் கைவிட்டுவிட்டார். இதனால் விரக்தி அடைந்த வயது முதிர்ந்த கணவன் மனைவி இருவரும் இன்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பாக மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை மீட்டு தெற்கு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.