திருப்பூர் மாவட்டம் உடுமலையில் போக்குவரத்து சார்பு ஆய்வாளர்கள் மொய்தீன், ரகுபதி ஆகியோர் போக்குவரத்து காவலர்களுடன் பொள்ளாச்சி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த திருப்பூரைச் சேர்ந்த பாபு என்ற இளைஞரை நிறுத்தி ஆய்வு மேற்கொண்டபோது, கோபமடைந்த அந்த வாலிபர் போக்குவரத்து காவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து சாலையில் செல்லும் வாகனங்களை நிறுத்தி ரகளையில் ஈடுபட்ட அந்த இளைஞரை காவல் துறையினர் சமதானம் செய்ய முயற்சித்தனர். எனினும் அதைக் கேட்காத அந்த இளைஞர் சாலையின் நடுவே அமர்ந்துக் கொண்டு சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு செய்தார். இதனை அங்கிருந்த சிலர் செல்ஃபோனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
போக்குவரத்து காவலர்களை தரைகுறைவாக பேசி பணிசெய்யவிடாமல் தடுத்ததாகவும், போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியதற்காகவும் அந்த இளைஞன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க : பேருந்தை நடு ரோட்டில் நிறுத்திவிட்டு சண்டை: ஸ்தம்பித்த போக்குவரத்து!