திருப்பூர் மாவட்டம் காங்கேயத்திலிருந்து டெல்லி சமய மாநாட்டுக்குச் சென்று வந்தவருக்கு பரிசோதனையில் கரோனா வைரஸ் பாதிப்பில்லை என விடுவிக்கப்பட்ட நிலையில், அவரது மனைவிக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து அவர் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் 108 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்கள் வசித்த பகுதிகள், அவர்களுடன் தொடர்பிலிருந்த 848 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதையடுத்து நேற்று(ஏப்ரல் 18) பாதிக்கப்பட்ட 108 பேரில் 9 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அவர்களில் காங்கேயம் ராஜாஜி வீதியை சேர்ந்த ஒருவரின் மனைவிக்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதையடுத்து அவர், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அதையடுத்து அவர் வசித்த காங்கேயம் ராஜாஜி வீதி, வினோபா வீதி, பெருமாள் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 300க்கும் மேற்பட்ட வீடுகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை தனிமைப்படுத்தும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஒரே நாளில் 18 பேருக்கு கரோனா உறுதி!