கம்யூனிஸ்ட் கட்சியை களங்கப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய விஸ்வா என்பவரை கைது செய்ய வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்கா அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் தடையை மீறி கருப்புக் கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.
காவல் துறையின் அனுமதியின்றி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பாலன் இல்ல கட்டடம் குறித்து அவதூறாக முகநூலில் பதிவிட்ட விஸ்வா என்பவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவதூறு பரப்பியவரை கைது செய்ய காலம் தாழ்த்தும் தமிழ்நாடு காவல் துறையை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.