ETV Bharat / state

திருப்பூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் திறப்பு - Udumalai K. Radhakrishnan

திருப்பூர்: பல்லடம் சாலையில் ரூ.37 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹி காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.

Court inauguration function in Tiruppur
Court inauguration
author img

By

Published : Dec 19, 2020, 5:35 PM IST

திருப்பூர் மாவட்டமான பின்னரும் நீதிமன்றங்கள் இருவேறு இடங்களில் செயல்பட்டு வந்தன. இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு அப்போதைய உயர் நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, பல்லடம் சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

தற்போது நீதிமன்றம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இன்று (டிச.19) ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

திருப்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார், சுவாமிநாதன், மாவட்ட நீதிபதி அல்லி, கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திருப்பூர் மாவட்டத்திற்கு 37 கோடி ரூபாய் மதிப்பில் நீதிமன்றம் ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

இதையும் படிங்க: பணத்தை தொலைத்ததால் திட்டிய பெற்றோர் - மகன் எடுத்த விபரீத முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.