திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் சாலையைச் சேர்ந்த தாஜூதீன்- அசினா தம்பதியினரின் மகன் மகபூப் பாஷா. கல்லூரி மாணவரான இவர், கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தாராபுரம் சாலையில் உள்ள ஆண்டிபாளையம் பிஏபி வாய்க்காலில் விளையாட சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக தவறி வாய்க்காலில் விழுந்துள்ளார். இது குறித்து தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் மூன்று நாள்கள் ஆகியும் அவரது உடல் மீட்கப்படவில்லை. தீயணைப்புத் துறையினர் ஒரு நாள் மட்டுமே தேடி வந்த நிலையில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருப்பதாகக் கூறி தேடுதலை நிறுத்தினர்.
இந்நிலையில், பிஏபி வாய்க்காலில் தண்ணீர் செல்வதை நிறுத்தி மாவட்ட நிர்வாகம் தனது மகனின் உடலை மீட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தி பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதையும் படிங்க:கப்பல் ஆற்று ஊரணியை கடந்து உடலை எடுத்துச் செல்லும் பொதுமக்கள்