மதுரையைச் சேர்ந்தவர் வாசு(40). அவர் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்றவர். அதையடுத்து அவர் திருப்பூர் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றிவந்தார். இந்த நிலையில் நுரையீரல் பாதிப்புக்குள்ளான வாசு, மருத்துவ விடுமுறையில் சொந்த ஊரான மதுரைக்கு சென்றார்.
அங்கு நுரையீரல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சிகிச்சையின் போது அவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதன்பின் 11 நாள்கள் சிகிச்சைக்குப் பின் கரோனாவிலிருந்து குணமடைந்தார். இந்த நிலையில் நுரையீரல் பாதிப்பு சிகிச்சையிலிருந்த அவர் நேற்றிரவு (ஆகஸ்ட் 3) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிங்க: கரோனாவுக்கு சித்த மருத்துவர் உயிரிழப்பு