கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு, மத்திய அரசு மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகளை திறக்க சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வுகள் குறித்து அம்மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார்.
இதில், "திருப்பூரில் 114 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 109 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னை கோயம்பேட்டில் இருந்து வந்த இரண்டு பேர் தாமாகவே முன்வந்து சோதனை செய்ததில் நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது இருவருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சென்னை கோயம்பேடு பகுதியிலிருந்து யாரேனும் திருப்பூர் வந்திருந்தால், தாமாக முன்வந்து தெரிவிக்க வேண்டும்.
தொழில் துறை நிறுவனங்கள் செயல்படுவது குறித்து அனைத்துத் தொழில் அமைப்பினருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. நிறுவனங்கள் அனைத்தும் அரசாங்கம் வகுத்துள்ள விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட முப்பது பகுதிகளில் இருந்து 28 பகுதிகளாக மாறியுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: 'நீலகிரி, ஈரோடு பச்சை மண்டலங்களாக மாற பிரகாசமான வாய்ப்பு'