கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி, அழகு நிலையங்கள், சலூன் கடைகள், திரையரங்குள் இன்று முதல் (ஏப். 26) செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உணவகங்களில் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. வழிபாட்டுத்தலங்களில் பொதுமக்கள் வழிபட அனுமதியில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
வங்கி செயல்படும் நேரம்
இதன் ஒருபகுதியாக வங்கிகள் காலை 10 மணிமுதல் மதியம் இரண்டு மணிவரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முகக்கவசம் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னரே வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க, செலுத்த குறைந்த அளவிலான வாடிக்கையாளர்கள் அனுமதிக்கபடுகின்றனர்.
காசோலை, வரவோலை உள்ளிட்ட பிற சேவைகளுக்கு வங்கியின் முன் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பெட்டியை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு வருபவர்கள் வரிசையில் நிற்க தடுப்புகள், காத்திருக்க குடிநீர் வசதியுடன் கூடிய பந்தல் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.