திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 30 வார்டுகளில் தனியார் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த தொழிலாளர்களாக சுமார் 500க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களும் அதிக அளவில் வேலை செய்து வருகின்றனர்.
ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் இந்த பணியாளர்களுக்கு மாதச்சம்பளமாக ஒன்பதாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால், கடந்த இரண்டு மாதமாக ஒப்பந்த நிறுவனம் இவர்களுக்கு ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் இன்று பணிக்கு வர மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலுவையில் உள்ள ஊதியத் தொகையை உடனடியாக கொடுத்தால் மட்டுமே பணிக்கு திரும்புவோம் எனவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஊதியம் வழங்கக்கோரி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!