ETV Bharat / state

டாஸ்மாக் வேண்டாம்: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவர், சிறுமியர்கள்! - திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூர்: மதுபானக் கடையை மூட வலியுறுத்தி, அப்பகுதியில் உள்ள சிறுவர்-சிறுமியர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் சிறுவர்,சிறுமியர்கள்

author img

By

Published : May 7, 2020, 8:45 PM IST

தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கடந்த 43 நாள்களுக்கு மேலாக மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதையடுத்து, தற்போது மதுபானக் கடைகள் கட்டுப்பாடுகளுடன் திறப்பதற்குத் தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது. இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு உட்பட்ட கரைப்புதூர், அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர்கள் மதுபானக் கடைகள் மூட வேண்டும் என்று, அப்பகுதியில் உள்ள மதுபானக் கடையை முற்றுகையிட சென்றனர்.

இதற்கிடையில், காவல்துறையினர் அந்த சிறுவர், சிறுமியர்களைத் தடுத்து நிறுத்தியதால், அவர்கள் பல்லடம் வட்டாட்சியரைச் சந்தித்து தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர். அதில், ”கரோனா வைரஸ் தொற்று மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் சூழ்நிலையில், பள்ளிகள் திறக்கப்படாமல், உணவுக்கே வழி இல்லாமல் தவித்து வருகிறோம்.

எங்களின் தந்தைகள் மதுபானக்கடைக்குச் செல்வதைத் தவிர்க்கும் பொருட்டு, மதுபானக் கடைகளை மூட வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுவர், சிறுமிகள் மதுபானக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: கரோனா காலத்தில் திருப்பூரில் குடை விற்பனை அமோகம்: அட காரணம் இதுதானா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.