திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் கடந்த 6ஆம் தேதி கூலித்தொழிலாளி வீரா என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டு, பிளாக் மாரியம்மன் கோயிலில் சடலமாக மீட்கப்பட்டார் . இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கௌதம், சஞ்சய் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து அவர்களிடம் விசாரித்ததில், ஏப்ரல் 6ஆம் தேதி தென்னம்பாளையம் மார்க்கெட் பகுதிகளில் எங்கே மது கிடைக்கும் என கொலையாளிகள் வீராவிடம் விசாரித்ததாகவும், அப்போது வீரா மது குடிக்காமல் இருக்குமாறு அறிவுரை கூறியதாகவும், அதனால் ஆத்திரமடைந்து கையில் வைத்திருந்த ஆயுதங்களைக் கொண்டு வீராவை தாக்கி கொன்றதாகவும் கூறியுள்ளனர்.
தற்போது தென்னம்பாளையம் சந்தையில் உள்ள சிசிடிவி கேமராவில் வீராவை கௌதமும், அவரது நண்பர்களும் துரத்தி தாக்குவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.