திருப்பூரில் ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில், உற்பத்திச் செய்யப்படும் பின்னலாடைகளை அட்டைப் பெட்டியில் வைத்து, ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.
கோரிக்கைகள்
- அட்டைப்பெட்டி செய்வதற்குத் தேவையான மூலப்பொருள்களின் விலை உயர்ந்துவருவதால், அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துவருவதாகவும், இதில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் காகிதத்தின் விலை 85 விழுக்காடுவரை உயர்ந்துவருவதால் தங்களது வாழ்வாதார தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- இதனைக் கருத்தில்கொண்டு மத்திய அரசு காகிதத்தை ஏற்றுமதி செய்வதைக் கட்டுப்படுத்தி, உள்நாட்டு உற்பத்திக்கு அதிகளவு பயன்படுத்த வேண்டும்.
காகிதம் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகைச் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் இன்றும் (மார்ச் 26), நாளையும் (மார்ச் 27) இரண்டு நாள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: 'திருப்பூரில் எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் வேலை நிறுத்தப் போராட்டம்'