ETV Bharat / state

உடுமலை அருகே பூட்டியே கிடக்கும் படகு இல்லம்! - திருமூர்த்தி அணை

திருப்பூர்: உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணைப்பகுதியில் போதிய பராமரிப்பில்லாததால் படகு இல்லம் பூட்டியே கிடக்கிறது.

பராமரிப்பின்றி கிடக்கும் படகுகள்
author img

By

Published : Jun 17, 2019, 7:27 AM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது திருமூர்த்தி அணைப்பகுதி. திருப்பூர் மாவட்டத்தில் பிரபலமான சுற்றுலத் தளங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த இடத்திற்கு திருப்பூர் மட்டுமின்றி வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

இங்கு தளி பேரூராட்சி நிர்வாகம் சார்பாக படகு இல்லம் அமைக்கப்பட்டு அங்கிருந்து படகுகள் இயக்கப்பட்டுவந்தது.

ஆபத்தான நிலையில் அமர்ந்துள்ள சுற்றுலப் பயனிகள்
ஆபத்தான நிலையில் அமர்ந்துள்ள சுற்றுலாப் பயணிகள்

இந்நிலையில் கடந்த பல மாதங்களாக படகு இல்லம் செயல்படாமல் மூடியே கிடக்கின்றது. படகு இல்லம் திறக்கப்படாமல் மூடியே உள்ளதால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் படகில் பயணித்து மகிழ முடியாமல் ஏமாற்றத்தோடு திரும்புகின்றனர்.

மேலும் அணைப்பகுதியும் பராமரிப்பின்றி போதுமான நாற்காலிகளும் இல்லாமல் இருப்பதால், அமர்வதற்குகூட இடமின்றி சாலை ஓரங்களிலும் அணைப் பகுதியிலுள்ள சுவர்களிலும் ஆபத்தான முறையில் அமரும் சூழ்நிலைக்குத் சுற்றுலாப் பயணிகல் தள்ளப்பட்டுள்ளனர்.

நல்லமுறையில் இயங்கிவந்த படகு இல்லத்தை மீண்டும் இயக்கவும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தரவும் வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Intro:Body:உடுமலை அருகே திருமூர்த்தி அணைப்பகுதியில் பூட்டியே கிடக்கும் படகு இல்லம்

அமர்வதற்க்கு கூட இடமின்றி சாலை ஒரங்களில் அமரும் சுற்றுலாபயணிகள்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது திருமூர்த்தி அணை இங்கு தளி பேரூராட்சி நிர்வாகம் சார்பாக படகு இல்லம் பராமரிக்கபட்டு படகுகள் இயக்கபட்டுவந்தது

இந்நிலையில் கடந்த பல மாதங்களாக படகு இல்லம் செயல்படாமல் மூடியே கிடக்கிறது படகு இல்லம் திறக்கப்படாமல் உள்ளதால் சுற்றுலாபயனிகள் படகில் பயணித்து மகிழமுடியாமல் ஏமாற்றதோடு திரும்பவதோடு அமர்வதற்க்கு கூட இடமின்றி சாலை ஓரங்களிலும் அணைபகுதி சுவர் ஓரங்களிலும் அமர்ந்து வருகின்றனர்

மாவட்ட. நிர்வாகம் உடனடியாக நடவடுக்கை எடுத்து நல்லமுறையில் இயங்கிவந்த படகு இல்லத்தை மீண்டும் இயக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தரவும் வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.