ETV Bharat / state

’அடுத்த ஆண்டும் பாஜக - அதிமுக கூட்டணி தொடரும்’ - வினோஜ் செல்வம்

திருப்பூர் : 2021ஆம் ஆண்டு தேர்தலிலும் பாஜக - அதிமுக கூட்டணியே தொடரும் என பாஜக மாநில இளைஞரணித் தலைவர் வினோஜ் செல்வம் தெரிவித்துள்ளார்.

vinoj-selvam
vinoj-selvam
author img

By

Published : Oct 9, 2020, 9:18 PM IST

திருப்பூர் மாவட்ட பாஜக செயற்குழு கூட்டம், தனியார் மண்டபம் ஒன்றில் இன்று (அக்.09) நடைபெற்றது. அதில் பாஜக மாநில இளைஞரணித் தலைவர் செல்வம் கலந்து கொண்டார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், "எந்தக் கட்சிக்கும் இல்லாத அளவு இளைஞர்களின் ஆதரவு பாஜகவுக்கு உள்ளது.

அதன் தாக்கம் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தெரிய வரும். 2021ஆம் ஆண்டு தேர்தலிலும் பாஜக - அதிமுக கூட்டணியே தொடரும் என பாஜக மாநிலத் தலைவர் முருகன் தெளிவாகத் தெரிவித்துள்ளார். இக்கூட்டணி வெற்றி பெறும். அதிமுக கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் முடிவு அவர்களுடைய கட்சியினுடையது. அதற்கு பாஜக கருத்து சொல்ல முடியாது" எனத் தெரிவித்தார்.

பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம்

அதைத்தொடர்ந்து பேசிய அவர், "விவசாய சட்டத் திருத்த மசோதாக்களுக்கு எதிரான போராட்டம், காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டுமே தூண்டிவிடப்படுகிறது. இந்த மசோதாக்களை ஏற்கனவே 2014ஆம் தேர்தல் அறிக்கையாக திமுக கொடுத்துள்ளது. சில ஆண்டுகளாகவே திமுக - அதிமுக என எந்தக் கட்சியிலிருந்து விலகுபவர்களும் பாஜகவிலேயே இணைகிறார்கள்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'முதலமைச்சர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்பதில் எந்த தயக்கமும் இல்லை, ஆனால்...!' - வானதி சீனிவாசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.