திருப்பூர்: சலவை பட்டறை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், அணைப்பாளையம் பகுதியில் பனியன் நிறுவனம் நடத்திவருகிறார். இவர் நேற்று (செப். 16) இரவு வேலை முடிந்து வீட்டிற்குச் செல்வதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தார்.
அப்போது ஆறு பேர் கொண்ட கும்பல் நிறுவனத்திற்குள் சென்று அவரை சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் ஸ்ரீகாந்த் கூச்சலிட்டுள்ளார். அவரது கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர், அவரது கடைக்குச் சென்றுள்ளனர்.
கொலைவெறித் தாக்குதல்
அக்கம்பக்கத்தினர் வருகையைக் கண்ட ஆறு பேரும், சம்பவ இடத்திலிருந்து வாகனத்தில் தப்பிச் சென்றனர். இதையடுத்து அப்பகுதி மக்கள், படுகாயமடைந்த ஸ்ரீகாந்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பிச் சென்ற ஆறு பேர் கொண்ட கும்பலைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர். மேலும் முன்விரோதம் காரணமாக இந்தக் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதா, வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: பள்ளி மாணவியைக் கடத்திய இளைஞர் போக்சோவில் கைது