திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கேரள வனப்பகுதியில் உள்ளது பாம்பாறு. அமராவதி அணையின் முக்கிய நீர் ஆதாரமான இந்த பாம்பாற்றை நேற்று (அக்.08) தாய் யானையுடன் கடக்க முயன்ற குட்டியானை எதிர்பாராத விதமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டு பாறையிடுக்கில் சிக்கி உயிரிழந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கேரள வனத்துறையினர் குட்டி யானையின் சடலத்தை கயிறு கட்டி மீட்டனர். பின்னர் வனப்பகுதியில் குட்டி யானையின் சடலம் தகனம் செய்யப்பட்டது.
பாம்பாற்றில் தாயுடன் வந்த குட்டியானை நீரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அம்முகுட்டியை பத்திரமாக கவனித்து கொள்வோம்! - வனத் துறை அலுவலர்கள் உறுதி