திருப்பூர் கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டி, இவர் அப்பகுதியில் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக ஏலச்சீட்டு மற்றும் பலகாரச்சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இவரிடம் அப்பகுதியை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் சீட்டில் பங்குதாரர்களாக சேர்ந்து மாதாமாதம் பணம் கட்டி வந்துள்ளனர். இதனிடையே கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே சீட்டு காலம் முடிந்த நிலையில். பணம் செலுத்திய பொதுமக்களுக்கு ஆறு லட்சம் ரூபாய் வரை பணம் கொடுக்க வேண்டி உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பணம் செலுத்திய பொதுமக்கள் பாண்டியிடம் கேட்டபோது இன்று நாளை என்று காலம் கடத்தி வந்தவர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாகியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டதோடு, சீட்டு நடத்தி மோசடி செய்த பாண்டியிடமிருந்து பணத்தை மீட்டுத் தரக்கோரி காவல் நிலையத்தில் மனு அளித்தனர்.
இதையும் படிக்க: பசிக்கு மண்ணை அள்ளி தின்ற குழந்தைகள்.!