திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அய்யாச்சாமி நகர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவர் அந்த பகுதியில் ஆயில் மில் வைத்து நடத்தி வருகின்றார். கடந்த 17-ஆம் தேதி இரவு பொன்னுச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் தூங்கச் சென்றுள்ளனர். அப்போது அதிகாலை 2 மணி அளவில் வீட்டின் முன்புற கதவு இருக்கும் பகுதியில் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது.
இந்த சத்தத்தை கேட்ட பொன்னுச்சாமி எழுந்து ஜன்னல் வழியாக பார்த்த போது ஆறு பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட முயற்சி செய்தது தெரியவந்தது. இதை அடுத்து அவர் சத்தம் போட்டதில் கதவை உடைத்து கொண்டிருந்த ஆறு பேர் கொண்ட கும்பல் வீட்டின் சுற்றுச் சுவர் மீது ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு எப்போது? - கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் விளக்கம்!
இதை அடுத்து, சம்பவம் குறித்து பொன்னுசாமி காங்கேயம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். வீட்டுக்கு அருகே உள்ள சிசிடிவி கேமாரா பதிவுகளை பார்வையிட்டு தப்பி ஒடிய ஆறு பேர் கொண்ட மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
பரபரப்பாக காணப்படும் காங்கேயம் பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் ஆயில் மில் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சி செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடை பேரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும், வீட்டின் கதவுகளை உடைக்கும் காட்சிகளும், பின்னர் ஒருவர் பின் ஒருவராக சுவர் ஏறி குதித்து தப்பிக்கும் காட்சிகளும் வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
இதையும் படிங்க: 295 உயிர்களை பலி வாங்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் என்ன? - ரயில்வே அமைச்சர் விளக்கம்!