திருப்பூர் மாவட்டம் பாளையக்காடு சூர்யா நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்(26). அவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்திவருகிறார். இந்த நிலையில், நேற்று (மே 25) மாலை சூர்யா நகரில் இரண்டு சிறுவர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றுள்ளனர். அதைக்கண்ட ராஜேஷ் சிறுவர்களை நிறுத்தி "குழந்தைகள் அதிகமிருக்கும் பகுதியில் ஏன் வேகமாக வாகனம் ஓட்டிச் செல்கிறீர்கள்" எனக் கேட்டுள்ளார்.
அதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள் மேலும் சிலருடன் மீண்டும் அப்பகுதிக்குச் சென்று அரிவாள், இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு ராஜேஷை தாக்கியுள்ளனர். அதுமட்டுல்லாமல் தகாத வார்த்தகளால் பேசிக் கொலை மிரட்டலும் விட்டுச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு காவல்துறையில் ராஜேஷ் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், என்.ஆர்.கே புரத்தைச் சேர்ந்த சிறுவர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு, மேலும் சிலரைத் தேடி விசாரணை நடத்திவருகின்றனர். தற்போது ராஜேஷ் அரசு மருத்துவமனையில் வெட்டுக்காயங்களுடன் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
இதையும் படிங்க: உறவினர்களுக்கு இடையே தகராறு: குழந்தைகளுக்கு அரிவாள் வெட்டு
வேகமான வாகனம் ஓட்டியச் சிறுவர்களைக் கண்டித்தவருக்கு அரிவாள் வெட்டு - திருப்பூரில் சிறுவர்கள் கைது
திருப்பூர்: பாளையக்காடு பகுதியில் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்ற சிறுவர்களைக் கண்டித்த நபரை அச்சிறுவர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர்.