ETV Bharat / state

ஊதிய உயர்வு கேட்டு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நோட்டீஸ் வழங்கி ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Aug 26, 2019, 4:50 PM IST

திருப்பூர்: வருடாந்தர ஊதியம் வழங்காததைக் கண்டித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை நோட்டீஸ் அடித்து பொதுமக்களுக்கு வழங்கினார்

Ambulance staff petition

தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் சேவையானது ஜி.வி.கே.இ.எம்.ஆர்.ஐ என்ற தனியார் நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த ஆம்புலன்ஸ் சேவையில் ஓட்டுநர், டெக்னீசியன் உள்பட 5000க்கும் மேலானோர் பணியாற்றிவருகின்றனர். இவர்களுக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு வரை அப்ரைசல் என்ற முறை இருந்ததை கண்டித்து பல கட்ட போராட்டங்கள் நடத்தினர்.

ஊதிய உயர்வு கேட்டு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நடத்திய கண்டனம்

அதன் அடிப்படையில் அந்த முறை ஒழிக்கப்பட்டு வருடாந்திர ஊதிய உயர்வு கொண்டு வந்ததாகவும், மேலும் இந்த வருடத்திற்கான ஊதிய உயர்வு இன்னும் வழங்கவில்லை என்ற செய்தியை நோட்டீஸ் அடித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.

வருடாந்திர ஊதிய உயர்வை வழங்காத நிர்வாகத்தை கண்டித்து , தங்களது கோரிக்கையை நோட்டீஸ் ஆக அச்சடித்து பொதுமக்களுக்கு வழங்கி வருகிறோம் என கூறிய ஆம்புலன்ஸ் ஊழியர்கள், தாங்கள் செய்யும் வேலை பொதுமக்களுக்காகத்தான். எனவே, இதனை அவர்களுக்கு தெரியப்படுத்தவே நோட்டீஸ் வழங்குவதாக தெரிவித்தனர்.

Intro:வருடாந்திர ஊதிய உயர்வை வழங்காத நிர்வாகத்தை கண்டித்து , தங்களது கோரிக்கையை நோட்டீஸ் ஆக அச்சடித்து பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்.

Body:108 ஆம்புலன்ஸ் சேவையானது ஜி.வி.கே.இ.எம்.ஆர்.ஐ என்ற தனியார் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 5000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதில் ஓட்டுநர் , டெக்னீசியன் உட்பட பல பணிகளில் பணியாற்றி வருகின்றனர். 3 வருடங்களுக்கு முன்பு வரை அப்ரைசல் என்ற முறை இருந்ததை கண்டித்து , பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு அந்த முறை ஒழிக்கப்பட்டு வருடாந்திர ஊதிய உயர்வு கொண்டு வந்ததாகவும் , இந்த வருடத்திற்கான ஊதிய உயர்வு தற்போது வரை வழங்கப்படவில்லை என்றும் அந்த நோட்டீஸில் கூறியுள்ளனர். போராட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்பாக , தாங்கள் செய்யும் வேலை பொதுமக்களுக்கு என்பதால் , தங்களது கோரிக்கைகளை பொதுமக்களிடம் தெரியப்படுத்துவதாகவும் கூறி , மாவட்ட ஆட்சியர் நுழைவு வாயிலில் நின்று மக்களுக்கு கோரிக்கை அடங்கிய நோட்டீஸை பொதுமக்களிடம் விநியோகித்து வந்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.