திருப்பூர் மாவட்டம், ராயபுரம் பகுதியில் காரில் வைத்து மதுபானங்கள் விற்பனை செய்து வருவதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில், அப்பகுதியில் காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, காரில் மதுபானம் விற்பனை செய்து வந்த 5 பேரை, காவல் துறையினர் பிடிக்க முயற்சித்தனர். அதில், ஒருவர் தப்பிச் சென்ற நிலையில், 4 நபர்களை காவல் துறையினர் மடக்கிப்பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், நான்கு பேரும் ராயபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார், ஜான், தனபால்,செல்வகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 227 குவார்ட்டர் பாட்டில்களையும், கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பிச் சென்ற குற்றவாளியையும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாய் இருந்த மகன் கொலை: தாய் கைது!