ETV Bharat / state

உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த 4 பேர் கைது!

திருப்பூர்: அவிநாசி அருகே உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்த 4 பேரை கைது செய்து மூன்று துப்பாக்கிகளை காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

4 arrested for rabbit hunting, 4 arrested for possession of unlicensed country gun, unlicensed country firearm near Tiruppur, நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததால் 4 பேர் கைது, திருப்பூரில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததால் 4 பேர் கைது, திருப்பூர் மாவட்டச்செய்திகள், திருப்பூர்
4 arrested for possession of unlicensed country firearm near Tiruppur
author img

By

Published : Mar 3, 2021, 8:53 AM IST

அவிநாசியை அடுத்த ஈட்டிவீரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர், நியூ திருப்பூர் அருகிலுள்ள வேலூர் பகுதியை சேர்ந்த மகேந்திரனோடும், அவர் நண்பர்களோடும் சேர்ந்து நியூ திருப்பூருக்கு பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் கடந்த 28 ஆம் தேதி முயல்வேட்டைக்கு சென்றுள்ளார்.

இதில் மகேந்திரனின் நண்பர்கள் வேட்டைக்கு பயன்படுத்தும் ஏர் கன் எனப்படும் நாட்டுத் துப்பாக்கியை கொண்டுவந்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று அதிகாலை முயல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது தவறுதலாக துப்பாக்கி குண்டு முருகேசனின் தோல் மீது பாய்ந்தது.

முருகேசன் மீது குண்டு பாய்ந்ததில் பயந்துபோன மகேந்திரனும் அவரின் நண்பர்களும் அங்கிருந்து தப்பியோடினர். தகவல் அறிந்த முருகேசனின் உறவினர்கள் அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இது குறித்து பெருமாநல்லூர் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் மகேந்திரன், மனோகரன், சந்துரு, ராஜ்குமார் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து மூன்று உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகள், வெடிமருந்து, ஈயகுண்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: பேரவைத் தேர்தலுக்குத் தயார் நிலையில் தமிழ்நாட்டின் டாலர் சிட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.