ETV Bharat / state

100 கி.மீ., வேகத்தில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து... கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் பலி!

author img

By

Published : Aug 3, 2020, 6:30 PM IST

Updated : Aug 3, 2020, 7:27 PM IST

திருப்பூர்: பொல்லிகாளிபாளையம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து, இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் மூவர் உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டச் செய்திகள்  பொல்லிகாபாளையம் கார் விபத்து  tiruppur latest news  Pollikali Palayam car accident
திருப்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான கார்...மூவர் பலி

கோவையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களான ரித்திக், பிரணவ், சுபாஷ், கிருத்திகா, மது உள்ளிட்ட ஐந்து பேர்; தங்களது நண்பர் பிரதாப்பின் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருப்பூர் மாவட்டம், கொடுவாயிலுக்கு காரில் வந்தனர். பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு திரும்பிய அவர்களின் கார், திருப்பூர் பொல்லிகாளிபாளையம் அருகே கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.

இவ்விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற சாமிநாதன்(75), அவரது மனைவி ரத்தினம்(65) மற்றும் காரில் சென்ற மாணவர் சுபாஷ்(23) ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சிசிடிவியில் பதிவான காட்சி

காரில் இருந்த மற்ற 4 மாணவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து அவிநாசிப்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைையும் படிங்க: மூடப்பட்டிருந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் கேட்டு ஊழியர்களைத் தாக்கிய நபர்கள்!

Last Updated : Aug 3, 2020, 7:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.