திருப்பூர் மாவட்டம், அம்மாபாளையம் ராமகிருஷ்ணா வீதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரி. பூ வியாபாரம் செய்து வரும் ஈஸ்வரி, கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு சரவணகுமார் (10) , ரோஷினி (8) என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று (ஆக. 29) மதியம் தனது தோழி வீட்டுக்கு ஈஸ்வரி சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. பின்னர், மாலை ஈஸ்வரி வீட்டுக்கு வந்து பிள்ளைகளை தேடிய போது காணவில்லை. இதையடுத்து, திருமுருகன் பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பின்னர் காவல் துறை மேற்கொண்ட விசாரணையில், இரண்டு பிள்ளைகளும் நேற்று மதியம் முதல் மாலை வரை அங்குள்ள கானக்காடு பாறைக்குழியில் குளித்து விளையாடியது தெரியவந்தது.
இதையடுத்து காவல் துறையினர் இன்று (ஆக .30) காலை பாறைக்குழியில் தேடிய போது, சிறுவர்கள் இருவரும் சடலமாக மிதந்து கிடந்தனர். இதனையடுத்து உடலை மீட்ட காவல் துறையினர் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து, இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:மாஞ்சா நூல் அறுத்து ஒருவர் காயம்... 3 பேர் கைது!