திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று (செப்டம்பர் 5) புதிதாக 196 பேருக்கு, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 99 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், கரோனா சிகிச்சைப் பெற்று 96 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 970 பேர் கரோனா பாதிப்பு காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும், கரோனா தொற்றால் இன்று சிகிச்சைப் பலனின்றி இருவர் உயிரிழந்தனர். இதனால், மாவட்டத்தில் மொத்தம் 76 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.