திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவிற்கு உட்பட்ட வடுகபாளையம் அருகே கருவேலங்காட்டு தோட்டத்தில் சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வனத்துறையினருடன் சென்ற காவல்துறையினர், தீவிர சோதனை மேற்கொண்டர். அப்போது அங்கு சட்டவிரோதமாக சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தப்பிக்க முயற்சித்துள்ளனர்.
அவர்களை துரத்திப் பிடித்த காவல்துறையினர், 15 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 10 சேவல்கள், 15 இருசக்கர வாகனங்கள், ரூ.35,000 பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும், சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, வெள்ளி கொள்ளை!